உங்கள் YouTube channel ஐ எவ்வாறு Delete செய்வது?
Delete YouTube Channel
✔ இந்த பதிவில், யூடியூப்(YouTube) சேனலை எப்படி YouTube தளத்தில் இருந்து நீக்குவது(Delete) என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். உங்கள் YouTube சேனலை Delete செய்தால், நீங்கள் பதிவேற்றிய(upload) வீடியோக்கள் மற்றும் பிறரது வீடியோக்களுக்கு நீங்கள் செய்த கமெண்ட்கள் என அனைத்து தகவல்களும் ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்.
✔ உங்கள் சேனலை நீக்கிவிட்டால்(Delete), உங்களால் மீண்டும் உங்கள் சேனலை மீட்டெடுக்க முடியாது. எனவே யூடியூப்(YouTube) சேனலை Delete செய்யும் முன் கவனமாக இருங்கள்.
Delete YouTube Channel |
✔ நீங்கள் உங்கள் யூடியூப்(YouTube) சேனலை Delete செய்தால் இந்த பிரச்சனைகள் முன்னோக்க வேண்டி இருக்கும். அதற்கு பதிலாக உங்களுக்கு ஒரு சிறந்த யோசனை நான் தர விரும்புகிறேன். அதாவது youtube channel ஐ நீக்குவதற்குப் பதிலாக அதை Hide செய்யலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் வீடியோ மற்றும் பிற யூடியூப்(YouTube) தகவல்கள் யூடியூப்(YouTube) தளத்தில் இருந்து Hide செய்யப்படும். உங்கள் சேனலை முழுவதுமாக அகற்ற வேண்டுமெனில் மட்டுமே Delete என்ற option-ஐ தேர்ந்தெடுக்கவும்.
✔ இப்போது இந்தப் பதிவில், முதலில் யூடியூப்(YouTube) சேனல்களை எப்படி மறைப்பது(Hide) என்று பார்ப்போம். பின்னர் அதை எப்படி நீக்குவது(Delete) என்று பார்ப்போம்.
Hide YouTube Channel
✔ இப்போது இந்த பதிவில் உள்ளது போல் ஓரொரு படிகளை ஒவ்வொன்றாக சரியாய் செய்யுங்கள். இந்த படிநிலைகளை பின்தொடரும் போது, உங்கள் யூடியூப்(YouTube) சேனல் YouTube தளத்தில் இருந்து மறைக்கப்படும்.
- முதலில் யூடியூப்(YouTube)ஐத் Open செய்து கொள்ளுங்கள். அதை செய்ய மேலே உள்ள link ஐ click செய்தும் Open செய்யலாம்.
- கீழே படத்தில் காட்டியது போல பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள லோகோவைக்(Logo) கிளிக் செய்யவும்.
Hide YouTube Channel |
- கீழ்தோன்றும் மெனுவில் Settings என்ற option-ஐ தேர்ந்தெடுக்கவும்.
- கீழே படத்தில் உள்ளது போல இடது பக்கப்பட்டியில் உள்ள Advanced Settings -ஐ கிளிக் செய்யவும்.
Hide YouTube Channel |
- அந்த பக்கத்தின் கீழே உள்ள ‘Delete Channel’ என்ற option -ஐ தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது ‘I want ot hide my content’ என்ற option ஐ தேர்ந்தெடுக்கவும்.
Hide YouTube Channel |
- கேளே படத்தில் உள்ளது போல தேர்வுப்பெட்டியில் டிக்(Tik) செய்து, ‘Hide my content’ என்ற button ஐ கிளிக் செய்யவும்.
Hide YouTube Channel |
✔ இவ்வாறு, ‘Hide my content’ என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் யூடியூப்(YouTube) சேனலை யூடியூப்(YouTube) தளத்தில் இருந்து hide செய்யலாம்.
இதேபோல், உங்கள் சேனலை மீண்டும் Unhide செய்ய விரும்பினால், மேலே படத்தில் உள்ள பக்கங்களை மீண்டும் திறந்து, உங்கள் சேனலை Unhide செய்து கொள்ளலாம்.
Delete Youtube channel Permanently
எச்சரிக்கை! உங்கள் சேனலை நீக்கிவிட்டால்(Delete) , அதை மீண்டும் பெற முடியாது.
- முதலில் YouTube பக்கத்தை திறக்கவும். அதை செய்ய மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.
- கீழே படத்தில் உள்ளது போல பக்கத்தின் மேல் வலது மூலையில் உள்ள லோகோவைக்(Logo) கிளிக் செய்யவும்.
Delete YouTube Channel |
- கீழ்தோன்றும் மெனுவில் Settings-ஐ தேர்ந்தெடுக்கவும்.
- இடது பக்கப்பட்டியில் உள்ள Advanced settings -ஐ கிளிக் செய்யவும்.
Delete YouTube Channel |
- மேலே படத்தில் உள்ளது போல பக்கத்தின் கீழே உள்ள Delete channel என்ற option தேர்ந்தெடுக்கவும்.
- கீழே படத்தில் காட்டியுள்ளது போல, ‘I want to delete my account’ என்ற option ஐ தேர்ந்தெடுக்கவும்.
Delete YouTube Channel |
தேர்வுப்பெட்டியில் டிக்(tick) செய்து எனது ‘delete my content’ என்ற option ஐ கிளிக் செய்யவும்.
✔ நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், உங்கள் சேனலை நீக்கியவுடன்(Delete) உங்கள் வீடியோ மற்றும் தகவலை மீண்டும் உங்களால் பெற முடியாது. இது உங்கள் சேனலை நிரந்தரமாக delete செய்யும் முறையாகும். எனவே கவனமாக கையாளவும்.
வாழ்த்துகள்! உங்கள் சேனலை நிரந்தரமாக மறைப்பது அல்லது நீக்குவது எப்படி என்பதை கற்றுக்கொண்டீர்கள்.
வாழ்த்துகள்! உங்கள் சேனலை நிரந்தரமாக மறைப்பது அல்லது நீக்குவது எப்படி என்பதை கற்றுக்கொண்டீர்கள்.
Conclusion:
✔ இந்த இடுகையின் மூலம் உங்கள் யூடியூப்(YouTube) சேனலை எவ்வாறு நீக்குவது(Delete) மற்றும் மறைப்பது(Hide) என்பதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். அதே போல் யூடியூப்(YouTube) பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால் இடது பக்கத்தில் உள்ள பெல் பட்டனை அழுத்தி எங்கள் பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்யவும்.
✔ அது நாங்கள் பதிவிடும் பெரும்பாலான புதிய தகவல்களை உடனடியாக உங்கள் கண் முன்னே கொண்டு வரும். இந்த பதிவு பற்றிய கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள கேள்விகளைப்(FAQ) பார்க்கவும்.
FAQ:
Why delete the youtube channel?
✔ பொதுவாக, YouTube சேனலைத் தொடங்கும் அனைவரும் YouTube விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் தொடங்குவார்கள். எனவே அவர்கள் சேனலை நீக்க(Delete) வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
Is there any way to resume the channel after a long time without deleting it?
✔ ஆம், உள்ளது. உங்கள் சேனலை நீக்காமல் மீண்டும் தொடர விரும்பினால், மேலே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் சேனலை Hide செய்து கொள்ளலாம் அதாவது மறைத்துக்கொள்ளலாம்.
Is there any harm in deleting Youtube Channel?
✔ இல்லை. உங்களுக்குத் தேவையில்லாத சேனலை நீக்குவது உங்கள் youtube accountக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
How do you delete your channel on YouTube in tamil?
✔ இதை மிகத் தெளிவாகவும் விரிவாகவும் இந்தப் பதிவில் கூறியுள்ளோம். மேலே உள்ள படிகளைப்(Steps) பின்பற்றி உங்கள் சேனலை நீக்கலாம்.
✔ இந்த பதிவை நீங்கள் படித்திருந்தால் பகிரவும். இது போன்ற பல யூடியூப்(YouTube) பற்றி மேலும் அறிய, எங்களின் யூடியூப்(YouTube) சேனலான ‘YT 360’ க்கு Subscribe செய்யவும். மேலும் Tech தொடர்பான தகவல்களுக்கு, ‘Tech girl தமிழ்’ சேனலுக்கு Subscribe செய்யவும்.
நன்றி!!!