YouTube Views Increase Tips Tamil
பொதுவாக இன்று அனைவரும் எப்படியாவது பிரபலம் ஆடைய வேண்டும் என்று tiktok, Instagram போன்ற சமூக வலைதளங்களில் பல வித்தியாசமான வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் அந்த strategy YouTube கு பொருந்தாது. ஏனெனின் YouTube ஒரு தேடுதல் தளம். பொழுதுபோக்கு மட்டும் YouTube ன் நோக்கம் கிடையாது. ஆகவே யூடியூபில் வைரல் ஆகுவது என்பது அவ்வளவு எளிமையான செயல் கிடையாது.
YouTube Tips Tamil |
நாங்கள் எங்கள் YT360 YouTube சேனலில் யூடியூப் பற்றி பல பயனுள்ள தகவல் பதிவிட்டு வருகிறோம். மேலே உள்ள லிங்க் கிளிக் செய்து எங்கள் யூடியூப் சேனல் விசிட் செய்து பாருங்கள்.
இந்த பதிவில் உங்கள் YouTube Channel வைரல் ஆக நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு 5 டிப்ஸ் தருகிறேன். இதை நீங்கள் உங்கள் சேனலில் உபயோக படுத்தினால் உங்கள் சேனல் வைரல் ஆவதை கண்கூடாக காணலாம்.
1. Don’t share videos:
YouTube channel ஆரம்பிக்கும் எல்லாரும் முதலில் செய்யும் தவறு அவர்களுடைய வீடியோவை share செய்வது. YouTube ஆரம்பிக்கும் அனைவருக்கும் வீடியோ பதிவிட்டதும் views வந்து விடுவது கிடையாது.
அதனால் சிலர் தங்கள் வீடியோவை Facebook Instagram போன்ற சமூக வலை தளங்களில் உள்ள group’s இல் share செய்து விடுகின்றனர். இப்படி செய்தால் YouTube ஒருபோதும் அந்த வீடியோவை recommend செய்யாது.
YouTube recommend செய்தால் மட்டுமே உங்களுக்கு views கிடைக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆகவே யூடியூப் வீடியோவை ஒரு போதும் share செய்யாதீர்கள்.
2. Quality content:
உங்கள் content quality யாக இருக்க வேண்டும். அதாவது உங்கள் content பார்க வரும் மக்கள் அதனால் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். அல்லது அந்த வீடியோவை skip செய்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு சிறந்த வீடியோவாக இருக்க வேண்டும்.
முடிந்த அளவிற்கு உங்கள் content ஐ எழுதி வைத்து அதை மக்கள் விரும்புவர்களா என்று நீங்களே கேள்வி கேட்டு அதை edit செய்து பின்பு அதை upload செய்யுங்கள்.
உங்கள் content எந்த அளவிற்கு மக்களுக்கு பயனை தருகிறது என்பதை பொறுத்தே உங்கள் வீடியோ வைரல் ஆகும்.
3. Pro Editing:
அடுத்து உங்கள் வீடியோ எங்கேஜிங் ஆக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வீடியோ எடிட்டிங் சிறப்பானதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் யாருக்கும் எடிட்டிங் சிறப்பானதாக அமையாது. அதை நாம் தான் கற்று கொண்டு நமது வீடியோவை update செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் filmora, davanci போன்ற editior இல் edit செய்தாலும் நீங்கள் எதிர்காலத்தில் premier pro போன்ற High level editor பயன்படுத்தி edit செய்ய கற்று கொள்ளுங்கள். அதன் மூலம் High engaging audience ஐ பின்தொடர வைக்க முடியும்.
4. Regularity:
அடுத்து உங்கள் audience ஐ எப்போதும் பின்பற்ற செய்ய வேண்டும். அதாவது உங்கள் வீடியோ அடிக்கடி அவர்களின் கண்ணில் பட வேண்டும். அதற்கு வாரத்தில் ஒரு நாள் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எப்போதும் ஒரு வீடியோ பதிவிடுங்கள். அதாவது ஒரு தொடர்ச்சியாக வழக்கத்தை கொண்டிருங்கள்.
இது உங்கள் எதாவது ஒரு வீடியோவை YouTube recommendation செய்து அதை வைரல் ஆக்க வாய்ப்புள்ளது.
5. Experience:
எப்போதும் ஒரே மாதிரி வீடியோ பதிவிடமல் உங்கள் வீடியோவில் சில update செய்ய கற்று கொள்ளுங்கள். அதாவது நீங்கள் உங்களை போல உங்கள் content போலவே வீடியோ பதிவிடும் சிலரது வீடியோவை பாருங்கள்.
அதில் அவர்கள் செய்யும் தவறுகளை உங்கள் வீடியோவில் தவிர்த்து விடுங்கள். அதுபோல அவர்கள் செய்யும் பல நல்ல tricks நீங்களும் பயன்படுத்தலாம்.