ஜிமெயில்(Gmail) இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒன்று. மொபைல் எண்களைப் போலவே, இன்று அனைவரும் ஜிமெயிலைப் பயன்படுத்துகின்றனர். ‘ஹாட்மெயில்(Hotmail)’ மற்றும் ‘அவுட்லுக்(Outlook)’ போன்ற பல அஞ்சல் சேவைகள் இருந்தாலும் கூகுளின் ஜிமெயில்(Gmail) சேவையே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. இந்த பதிவில் ஜிமெயிலின்(Gmail) சிறப்பு என்ன மற்றும் “ஜிமெயில் கணக்கை உருவாக்குவது எப்படி (How to Create Gmail Account)?” என்று பார்ப்போம்.
Benefits of a Gmail Account
முதலில் கூகுள் ஜிமெயில் (Gmail) சேவை முற்றிலும் இலவசம்.
இது அற்புதமான ஸ்பேம் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் பிற மின்னஞ்சல் சேவைகளை விட உங்கள் இன்பாக்ஸை சுத்தமாக வைத்திருக்கும்.
ஒரு ஜிமெயிலுக்கு 15ஜிபி வரை நினைவகத்தை(Memory) இலவசமாக வழங்குகிறது.
உங்கள் ஜிமெயில்(Gmail) ஐடி மற்றும் கடவுச்சொல்(password) மூலம் உலகில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக login செய்யலாம்.
உங்களிடம் இணையப் பயன்பாடு(internet service) இருந்தால், உலகின் எந்த மூலையிலிருந்தும் உங்கள் ஜிமெயில்(Gmail) கணக்கைப் பயன்படுத்தலாம்.
ஜிமெயில்(Gmail) உங்களின் முக்கியமான கோப்புகளை 15GB வரை இலவசமாக சேமிக்கும், இதனால் தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்கலாம்.
உங்கள் கோப்புகள் அழிந்துவிட்டன அல்லது தொலைந்துவிட்டன என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
How to Create Gmail Account
✅ கீழே உள்ள செய்முறைகளை பின்பற்றி உங்கள் புதிய ஜிமெயில்(Gmail) ஐடியை உருவாக்கலாம். மிகவும் கவனமாக கீழே உள்ள படிகளை பின்பற்றுங்கள்.
Set Up Your New Gmail Account
Open Chrome
✅ Google Chrome ஐ முதலில் Open செய்து கொள்ளுங்கள். அல்லது இந்த லின்க் (accounts.google.com) ஐ click செய்து நேரடியாக Gmail Account Create செய்யும் பக்கத்தை open செய்து கொள்ளலாம்.
Create Gmail
Create Gmail Account
✅இப்போது மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி உங்கள் ஜிமெயில்(Gmail) ஐடியை உள்ளிடக்கூடிய ஒரு பக்கம் தோன்றும். அந்தப் பக்கத்தின் கீழே கிரியேட் அக்கவுண்ட்(Create Account) என்று ஒரு பொத்தான் உள்ளது பாருங்கள். அதை கிளிக் செய்யவும்.
Create Gmail Account
மேலே படத்தில் காட்டியது போல 3 option தோன்றும்.
For myself.
For my child.
To Manage my business.
✅அதில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் சொந்த உபயோகத்திற்காக gmail account திறக்கிறீர்கள் என்றால், “For myself” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் குழந்தைக்காகத் திறக்கிறீர்கள் என்றால், “For my child” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது உங்கள் வணிகத் தேவைகளுக்காக Gmail கணக்கைத் திறக்கிறீர்கள் என்றால், “To Manage my business“ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நான் “For myself” என்ற option ஐ select செய்து கொள்கிறேன்.
Create Your Google Account:
Create Gmail Account
✅ மேலே உள்ளது போல அனைத்து கட்டங்களையும்(Box) நிரப்பவும்.
1. முதலில் உங்கள் பெயரை முதல் பெயர்(First Name), இரண்டாவது பெயர்(Last Name) பெட்டியில் உள்ளிடவும்.
2. நீங்கள் விரும்பும் பயனர் பெயரை(User Name) உள்ளிடவும். இந்த பயனர் பெயர்(User Name) தனிப்பட்டதாக இருக்க வேண்டும். ஏன்னெனில் ஒருவருக்கு ஒரு பயனர் பெயர் (User Name) கிடைத்துவிட்டால், அந்த தனிப்பட்ட பயனர்(User Name) பெயர் இன்னொருவருக்குக் கொடுக்கப்படாது.
✅ நீங்கள் தட்டச்சு செய்த பயனர் பெயர்(User Name) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டிருந்தால், கீழே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும்.
Create Gmail Account
✅ பிறகு மேலே உள்ள படத்தில் இருப்பது போல் உங்கள் பெயருடன் வேறு பெயர் அல்லது எண்ணை டைப் செய்யலாம். அல்லது கீழே பார்க்கவும் மற்ற பெயர்கள் பரிந்துரைக்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
✅ அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை(password) type செய்ய வேண்டும். முதல் கட்டத்தில், உங்கள் கடவுச்சொல்லை(password) உள்ளிடவும். அடுத்த கட்டத்தில், அதே கடவுச்சொல்லை(Password) உள்ளிட்டு உங்கள் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவும்.
உங்கள் கடவுச்சொல்லை மிகவும் வலிமையானதாக கொடுங்கள். உதாரணத்திற்கு சிறப்பு எழுத்துகள், எண்கள், பெரிய எழுத்துக்களைச் கலந்து உங்கள் password கொடுக்கவும். இல்லையெனில், உங்கள் ஜிமெயில் கணக்கு எளிதாக ஹேக் செய்யப்படலாம்.
✅அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு, கீழே உள்ள “அடுத்து(Next)” பட்டனை கிளிக் செய்யவும்.
Setup Your Personal Information
Create Gmail Account
1. முதலில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து 2-Step verification ON செய்ய வேண்டும். இது உங்கள் கணக்கைப் பாதுகாக்கும். 2-Step verification எவ்வாறு சரியாகச் செய்வது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐ click செய்து அந்த பதிவை படித்து கொள்ளவும்.
2. அடுத்து உங்களிடம் வேறு ஏதேனும் ஜிமெயில்(Gmail) ஐடி இருந்தால், அதை மீட்பு மெயில் ஐடியில் கொடுங்கள். உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், உங்கள் கணக்கை மீட்டெடுக்க இது உதவும்.
3. அடுத்து உங்கள் பிறந்த தேதியைக் கொடுக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஜிமெயில்(Gmail) கணக்கைத் திறக்க முடியும்.
4. நீங்கள் எந்த பாலினம் என்பதை தேர்வு செய்யவும்.
5. கீழே உள்ள “அடுத்து(Next)” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
Accept Terms & Conditions:
Create Gmail Account
✅ அடுத்து, மேலே உள்ள படத்தில் உள்ளது போல் ஒரு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் கீழே “I Agree” என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
அதைக் கிளிக் செய்வதற்கு முன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தெளிவாகப் படிக்கவும்.
உங்கள் புதிய ஜிமெயில் ஐடியை வெற்றிகரமாக Create செய்யப்படும்.
Create Gmail Account
✅ அடுத்து, கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி google.com ஐ திறக்கவும். அதற்கு மேலே ஜிமெயில்(Gmail) என்ற ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
Create Gmail Account
✅ கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி உங்கள் ஜிமெயில் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த ஜிமெயில்(Gmail) ஐடி மூலம் மெயில் அனுப்புவது எப்படி, ஜிமெயில் கணக்கை எப்படி பயன்படுத்துவது என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம். இந்த பதிவை பற்றி மேலும் சிறப்பான தகவல்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube வீடியோவை பார்க்கலாம்.
✅இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கருத்துப் பெட்டியில் தெரிவிக்கவும். மேலும் தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். நன்றி!!!